இங்கே உள்ளீர்கள்:   ஆரம்பம் > ஆதிசங்கரர்
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

ஆதிசங்கரர்

ஞானசித்தன் ஆதிசங்கரன்

"வெள்ளாடை மேனியான் உச்சிக்குடுமியான்
தென்பாண்டித் தமிழன், திருமூலர் குருவழி வாரிசு
திருவாசக தேவார சாரம் கண்டோன்
வடபுலத்துச் சித்தர் நெறி பரப்பியோன்
தமிழின் இந்துமதத்தைச் சமசுக்கிருத ஹிந்துமதமாக்கியோன்
சித்தர் இலக்கியம் பிறாமணர் பயில வழியமைத்தோன்
தென்னக அருட்பேரரசுக்கு உதவியாக வடபுலத்து அருட்பேரரசு கண்டோன்"

எனக் குருபாரம்பரியம் பாராட்டும் இமயமலைச் சாரலில் நிறைவு கொண்ட ஆதிசங்கரரின் உண்மை வரலாறு.

மதுரை கண்டப்பக் கோட்டைச் சித்தர் ஏளனம்பட்டியார் பதினெண்சித்தர் பீடாதிபதிகள் பற்றிய குறிப்புக்களைப் பலவாறாகத் தொகுத்து நிலக்கோட்டைக்கு அருகிலுள்ள கொண்டையம்பட்டி, கொல்லிமலை, அய்யன்பாளையம், ... போன்ற இடங்களில் குகைகளிலும், நிலவறைகளிலும் பாதுகாத்திட்டார். அவர் எழுதிய குறிப்புகளிலிருந்து ......

“... பலமுறை நான்கு சங்கராச்சாரியாரின் பீடங்களுக்கும் சென்றேன். யாருக்கும் இந்துமதத்தைப் பற்றி முழுமையாகத் தெரியவில்லை. இவர்களுக்குக் குருபாரம்பரியம் குறிக்கும் தென்பாண்டித் தமிழன், ஞானசித்தன், உச்சிக்குடுமியான், வெள்ளாடையான், மந்திர சித்தியான் ஆதிசங்கரன் பற்றி ஏதும் தெரியவில்லை. ஆதிசங்கரன் முதலாம் விசயாலயனின் அருளாட்சி முயற்சிக் காலத்தில் வாழ்ந்தவன். தென்னாட்டைக் காவிரியாற்றங்கரைக் கருவூறார் பெளத்தம், சமணம், வட ஆரிய வேதமதம் ... முதலியவைகளிலிருந்து காத்திடுவாரென்பது உணர்ந்து அவரின் அருளில் வடநாடு சென்றவனே ஆதிசங்கரன்.

"இவன் வடநாட்டவர்க்காகவும், வட ஆரியர்களைத் திருத்துவதற்காகவுமே சமசுக்கிருத மொழியில் சித்தர்களின் உண்மையான இந்துமதத் தத்துவத்தை எழுதினான். ஆனால், முதல்யுகச் சிவன், பிறமண், திருமால், முருகன், ... முதலியோர்களையும்; இரண்டாம் யுக இராமனையும் அவனோடு தொடர்புடையார்களையும்; மூன்றாம் யுகக் கண்ணனையும் அவனோடு தொடர்புடையார்களையும், ... நான்காம் யுகம் பிறந்து இரண்டாயிரமாண்டு கழித்தே இத் திருநாட்டுக்கு வந்த பிறமண்ணினரான பிறாமணர்கள் தங்களுடைய குலத்தவராக, மொழிக்காரராக, வேத மதத்தவராகப் பொய் கூறி உரிமை பாராட்டிக் கதைகளும் புராண இதிகாசங்களும் புனைந்தது போல் ஆதிசங்கரனையும் தங்களுடைய இனத்தானாக ஆக்கி விட்டார்கள்.

"இந்தப் பிறாமணர்களே ஆதிசங்கரனையும், அருணகிரியையும், மெளனகுருவையும், தாயுமானவரையும்... அழித்தனர். இந்தப் பிறாமணர்களால் வடலூர் அருட்பெருஞ்சோதி அருட்கொடை வள்ளல் பெருமான் அருட்பா வழங்கிய ஞானசித்தன் இராமலிங்கத்தை மட்டும் ஒன்றும் செய்ய முடியவில்லை. இருந்தாலும், இவர்கள் மத வெறிகளையும், சாதிவெறிகளையும், தீண்டாமை வெறிகளையும், ... தூண்டி விட்டு மக்களை என்றென்றும் ஒற்றுமையின்றிச் சண்டையிட்டு மடிபவர்களாக்கித் தாங்கள் மட்டும் அவர்களின் நிலையான தலைவர்களாகவே இருந்து சுரண்டி வாழ வழிசெய்து விட்டார்கள்.

"எனவே, சாதிகளை ஒழிப்பதும், மத ஒற்றுமை உருவாக்குவதும், தீண்டாமைக் கருத்தே இல்லாமல் செய்வதும்; பதினெட்டு வகைக் காடுகளிலும் உள்ள நாற்பத்தெட்டு வகையான உருவ, அருவ, அருவுருவங்களைப் புத்துயிர்ப்புச் செய்வதும்; நாற்பத்தெட்டு வகையான கருவறை மூலவர்களையும், அருளாளர்களையும், மருளாளர்களையும் அநுபவப் பூர்வமான அருளூற்றுக்களாக மாற்றுவதுமே, ... பிறமண்ணினரான பிறாமணர்களை அடக்கி யொடுக்கி உரிய நிலைக்குக் கொண்டு செல்லும். இல்லையேல், பீடாதிபதிகளின் பூசைகளில் அவிர்ப்பலியாகி அனைத்துத் தமிழின துரோகிகளும், விரோதிகளும் கூண்டோடும் பூண்டோடும் ஒழிய நேரிடும். அதுவே, தவிர்க்க முடியாத நிலை, ...”

"பிறாமணர்கள் ஆதிசங்கரனின் பின்னால் மறைந்து கொண்டு செயல்படுகிறார்கள். ஆதிசங்கரனே தமிழனென்பதையும், ஆதிசங்கரனின் நூல்கள் பதினெண்சித்தர்களின் இலக்கியங்களின் சாரமே யென்பதையும்; அமராவதி ஆற்றங்கரைக் கருவூறார் குறிப்பிடும் சேரன் மலைப்பகவதி, மூகாம்பிகை, காளி, திரிசூலி, ஈசுவரி, வனக்கிளி, வனராணி, வனதேவி, மலைமகள், மோகினி, தண்டினி, மாயை, ... முதலிய அனைத்துச் சத்திகளையும் அரிய தெய்வத் தமிழால் பூசை செய்துதான் சித்தி பெற்றான் என்பதையும்; ஆதிசங்கரனை பிறாமணர்களே அழித்தார்கள் என்பதையும்; சங்க இலக்கியங்களும், திருமூலரின் படைப்புக்களும், திருவள்ளுவரின் படைப்புக்களும், திருவாசகமும், தேவாரமுமே ஆதிசங்கரனை அருளாளனாக்கின என்பதையும்; காவிரியாற்றங்கரைக் கருவூறாரின் வாழ்த்தைப் பெற்று வடநாட்டில் இந்துமதம் வளர்க்கச் சென்றவனே ஆதிசங்கரன் என்பதையும் ... ... வெளிப்படையாக விளக்கித்தான் பிறாமணர்கள் ஆதிசங்கரனைக் கேடயமாகவும், அரணாகவும் பயன்படுத்துவதைத் தடுக்க முடியும்.

"அப்பொழுதுதான், பிறாமணர்களின் வேதமதக் குழப்பங்களையும், ஆரிய மாயைகளையும் அகற்றி உண்மையான இந்துமதம் என்கின்ற சித்தர் நெறியை மறுமலர்ச்சி பெறச் செய்ய முடியும். அப்பொழுதுதான், வட ஆரியரின் பிடியிலிருந்து இத்திருநாட்டு மக்களைக் காப்பாற்ற முடியும்...."

  • கண்டப்பக் கோட்டைச் சித்தர் ஏளனம்பட்டியாரின் எழுத்துக்களிலிருந்து.

 

 

« முந்தையது மேலே செல்ல அடுத்தது »

மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

ஆதிசங்கரர் குலம்

சீர்காழித் திருஞான சம்பந்தர் தந்தையான சிவபாத இருதயரின் வழிவந்த சிவாச்சாரியாரியாரான தமிழ் அந்தணர் சிவகுருவின் மகனே ஆதிசங்கரர்.

ஆதிசங்கரர் தமிழ்ச் சைவ கருணீக்க வேளாளர் குலக் கொழுந்தாய் பிறந்தவரே. ஆதிசங்கரர் தோன்றிய அதே கருணீக்க சைவ வேளாளர் மரபில், சிவபூசையில் தேறிய சிவாச்சாரியார் குடும்பத்தில் தோன்றிய வடலூர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர், அருட்கொடை வள்ளல், அருட்பா வழங்கிய பேரருளாளர், ஞானசித்தர் இராமலிங்க அடிகளார் என்பது குறிப்பிடத் தக்கது.

 

காஞ்சி மடம்

ஆதிசங்கரர் இந்தியாவில் நான்கு மடங்களே நிறுவினார் என்பது வரலாறு. இன்றும் கூட, இந்தியாவில் உள்ள (பூரி, காலடி, காசி...) நான்கு சங்கராச்சாரியார்களும் காஞ்சி சங்கராச்சாரியாரை ஏற்பதே இல்லை. தங்களில் ஒருவராகக் கருதுவதுமில்லை.

கும்பகோணத்தில் தோன்றிய சங்கர மடச் சத்திரத்தின் தொடர்புடைய 300 ஆண்டு வரலாறு கொண்டதே இன்றைய காஞ்சி சங்கரர் மடம். ஆதிசங்கரருக்கும் காஞ்சி மடத்துக்கும் தொடர்பு இல்லை. ஆதாரங்கள் உள்ளன.

 

மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

sathilingam © Copyright www.indhuism.org 2010-2020; Data in this website are from the Manuscript Libraries initiated by His Holiness Siddhar Arasayogi Karuwooraar, the 12th Pathinensiddhar Peedam.
Also visit http://www.indhuism.org; Contact us at indhuism@gmail.com


தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். அவருக்கு அடுத்து 900 ஆண்டுகள் கழித்து 12வது பதினெண்சித்தர் பீடாதிபதியாகத் திருத்தோற்றம் எடுத்த ஞானாச்சாரியார் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் எழுத்துக்களில் சில இந்த வலைத்தளத்தில் வெளியிடப் படுகின்றன. இவை ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் குருவாணைப்படியே அவர்கள் அமைத்திட்ட கையெழுத்துப் பிறதி நூலகங்களில் உள்ள நகல்களிலிருந்து வழங்கப் படுகின்றன.


தமிழே பூசைமொழி! தேவமொழி! தெய்வமொழி! அருளுலக ஆட்சிமொழி!


"இந்துக்கள் தங்களுடைய கோயில்களில், பூசைகளில் சமசுக்கிருதத்தைப் பயன்படுத்துவது பெரிய பாவம், கொடிய தீட்டு, நெடிய சாபத்தைத் தரும்." - குருபாரம்பரிய வாசகம்.

Powered by CMSimple | Template: ge-webdesign.de |