இங்கே உள்ளீர்கள்:   ஆரம்பம் > சித்தர் காகபுசுண்டரின் விளக்கம்
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

சித்தர் காகபுசுண்டரின் விளக்கம்

காயந்திரி மந்தரம் பற்றிய சித்தர் காகபுசுண்டரின் விளக்கம்

மறைமலையடிகள் கருத்து


சித்தர் காகபுசுண்டர் ம. பழனிச்சாமிப் பிள்ளை அவர்கள் இவ்வுலக மாபெரும் மார்க்சீயச் சிந்தனையாளர்களுள் ஒருவர். ஆனால், இவர் கடவுள் மறுப்பாளராகவோ, வெறுப்பாளராகவோ, மத எதிர்ப்பாளராகவோ, நாத்திகராகவோ வாழவில்லை. இவரை இலெனின், மாவோ,... போன்றவர்களுக்கு ஒப்பிட்டுப் பேசுகிறார் திரு எம்.என்.ராய்.

திரு எம்.என்.ராயும் இவரும் (M.N. Roy and M.P. Pillai founded the International Communist Party and the Radical Democratic Party) உலகக் கம்யூனிச இயக்கம் அமைப்பையே தோற்றுவித்த மூலவர்கள். இவர்களே இந்தியாவுக்காகச் சிறப்பாகப் 'பகுத்தறிவுக் குடியரசுக் கட்சி' என்ற இயக்கத்தையும் தோற்றுவித்தார்கள்.

திரு எம்.என். ராயும், டாக்டர் ஐன்சுடீனும் (அணுக்கொள்கையைக் கண்டறிந்த செர்மானிய நாட்டு யூத இன விஞ்ஞானி) சேர்ந்து செர்மனியில் உருவாக்கிய 'உலக மத ஆய்வுக் குழு' (The World Religious Research Society - T.W.R.R.S.) எனும் அமைப்பின் தலைவராக இந்திய மண்ணில் வாழையடி வாழையென வரும் சித்தர்களின் வழி வந்த சித்தர் காகபுசுண்டர் ம. பழனிச்சாமிப் பிள்ளையே நியமிக்கப்பட்டார்.

சித்தர் காகபுசுண்டருக்கு நேரடியாகச் சமசுக்கிருத மொழியில் மிகுந்த புலமையை வளர்த்துக் கொள்ள முடியவில்லையே என்ற வருத்தமுண்டு. ஆனால், மாக்சுமுல்லரின் (Maxmueller) ஆங்கில நூல்கள் மூலம் சமசுக்கிருத இலக்கிய உலகைப் புரிந்து; கி.பி.1772இல் இந்து மறுமலர்ச்சி இயக்கம் அமைத்த கண்டப்பக் கோட்டைச் சித்தர் ஏளனம்பட்டியார் (கண்டப்பக் கோட்டைக் கருவூறார்) உ. இராமசாமிப் பிள்ளை அவர்கள் சமசுக்கிருத மொழி பற்றிக் கூறிய கருத்துக்களை ஆராய்ந்தார்.

இது பற்றி இவர், ".... நான் எதையும் சிந்தித்து ஆராய்ந்து உண்மையைக் கண்டறியும் மார்க்சீயவாதி. மார்க்சீயம் எவரையும் நேர்மையான சிந்தனையாளராக்கும். சமசுக்கிருத மொழியை வெறுப்பதும், மறுப்பதும், எதிர்ப்பதும் தேவைதானா என்ற கருத்துப் போராட்டம் எனக்கு எப்போதும் இருக்கிறது.

தமிழிலிருந்த காயந்திரி மந்தரம் என்பதை ஆரியர்கள் அழித்திடவே அதே போன்ற ஒலியையுடைய 'ஸ்ரீகாயத்ரீ மஹாமந்த்ரம்' ஒன்றைப் படைத்தார்கள். ஆனால், தமிழிலுள்ள காயந்திரி மாந்தரம், மாந்தரீகம், மந்திறம், மந்திரம் எனும் நான்கை ஆரியர் அறிய முடியாதபடி சித்தர்கள் காத்திட்டதால்தான் அவை பிழைத்தன என்ற கருத்தைத் தமிழ்ப் பெரியார் மறைமலையடிகளிடம் பலமுறை எடுத்துக் கூறி இது பற்றிய அவரின் கருத்தைக் கேட்டேன். அவர் கூறிய பதில் கண்டப்பக் கோட்டைக் கருவூறார் எனப்படும் கண்டப்பக் கோட்டைச் சித்தர் ஏளனம்பட்டியார் உ. இராமசாமிப் பிள்ளையின் கருத்தையே வலிமைப் படுத்தியது. எனவே, ஒரு மார்க்சீயவாதி என்ற முறையில் நான் மறைமலையடிகளாரின் கருத்தை அப்படியே குறித்து வைக்கிறேன்.

மறைமலை அடிகள்: 'காயத்ரீ ஜெபம் என்பது வெறும் ஏமாற்றே. அந்த மந்தரத்தைச் சொல்லிச் சத்தி பெற்றவர்களோ! சித்தி பெற்றவர்களோ! கிடையாது. நமது தேவார, திருவாசகப் பாடல்களுக்கு இருக்கிற சத்தியில் கோடியில் ஒரு பங்கு கூட இதற்கு இல்லை.

சமசுக்கிருத பண்டிதர்கள் யாரும் இந்தக் காயத்ரீ மந்த்ரத்திலுள்ள சொற்களுக்கு எந்தக் குறிப்பிட்ட நிகண்டையோ (அகராதி Dictionary) குறிப்பிட்டுப் பொருள் சொல்லுவதில்லை. இந்த மந்தரப் பாடலும் இலக்கண நூலுக்கு ஒத்ததாக இல்லை. எனவே, இது தமிழிலிருந்த மந்தரத்தின் ஒலியை மட்டும் அப்படியே பின்பற்றி உருவாக்கப் பட்டதாக இருக்கலாம். சித்தர் ஏளனம்பட்டியார், 'பதினெண்சித்தர் பீடாதிபதிக்குத்தான் காயந்திரி மந்தரத்தை வெளியிட உரிமையுண்டு' என்று கூறிச் சென்று விட்டதால், தமிழில் உள்ள காயந்திரி மந்தரம் தெரிய முடியவில்லை. அதனால், சமசுக்கிருதக் காயத்ரீ மந்த்ரத்தைத் தமிழில் முதலில் தோன்றிய காயந்திரி மந்தரத்தோடு ஒப்பிட முடியவில்லை.

இன்றைய சமசுக்கிருதப் பிரியர்கள் காயத்ரீக்குக் கூறும் பொருள் உண்மையானதல்ல. எந்த ஒரு சொல்லுக்கும் அவர்கள் கூறும் பொருள் உண்மையில் அச்சொல்லுக்குரியதல்ல; வலிந்து இவர்களாகக் கூறியதேயாகும்.

ய = எவர்
ந = நம்முடைய
திய = புத்தியை
ப்ரசோதயாத் = தூண்டுகிறாரோ
தத் = அப்படிப்பட்ட = (பரப்ரஹ்மம்)
தேவஸ்ய = ப்ரகாசனான
ஸவிது = உலகை உண்டு பண்ணுபவருடைய, அதாவது சூரியன், சிவன், நாராயணன்... என்போருடைய
வரேண்யம் = மிக உயர்ந்ததான
பர்க = தேஜஸ்ஸை
தீமஹி = தியானம் செய்கிறோம்.


அதாவது, அறிவை நல்ல விஷயத்தில் பிரேரணை செய்யப் பழக்குகிறோம் எனப்படும் இப்பொருள்களைக் காசிச் சமசுக்கிருதப் பண்டிதர்கள் கூட இலக்கிய இலக்கண ஆதாரம் காட்டி மெய்ப்பிக்கவில்லை ...' என்று **மறைமலை அடிகளார் கூறினார்."

** இங்கே மறைமலை அடிகளாரின் தூய தனித் தமிழ் நடையில் பதில் இல்லை. அதாவது ம.பழனிச்சாமிப் பிள்ளை சித்தர் காகபுசுண்டர் தமது சொந்த நடையில் மறைமலை அடிகளாரின் கருத்தை எழுதியுள்ளார்.

குறிப்பு: ஆரியர்களால் ஓதப்படும் காயத்ரீ மஹாமந்த்ரத்தில் உள்ள சில சொற்களுக்குப் பொருளில்லை என்று மறைமலை அடிகளே கூறியுள்ளார். அவையாவன:

1. பூர் 2. புவஸ் 3. தியோ 4. யோந 5. விதுர


« முந்தையது மேலே செல்ல

மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

sathilingam © Copyright www.indhuism.org 2010-2020; Data in this website are from the Manuscript Libraries initiated by His Holiness Siddhar Arasayogi Karuwooraar, the 12th Pathinensiddhar Peedam.
Also visit http://www.indhuism.org; Contact us at indhuism@gmail.com


தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். அவருக்கு அடுத்து 900 ஆண்டுகள் கழித்து 12வது பதினெண்சித்தர் பீடாதிபதியாகத் திருத்தோற்றம் எடுத்த ஞானாச்சாரியார் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் எழுத்துக்களில் சில இந்த வலைத்தளத்தில் வெளியிடப் படுகின்றன. இவை ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் குருவாணைப்படியே அவர்கள் அமைத்திட்ட கையெழுத்துப் பிறதி நூலகங்களில் உள்ள நகல்களிலிருந்து வழங்கப் படுகின்றன.


தமிழே பூசைமொழி! தேவமொழி! தெய்வமொழி! அருளுலக ஆட்சிமொழி!


"இந்துக்கள் தங்களுடைய கோயில்களில், பூசைகளில் சமசுக்கிருதத்தைப் பயன்படுத்துவது பெரிய பாவம், கொடிய தீட்டு, நெடிய சாபத்தைத் தரும்." - குருபாரம்பரிய வாசகம்.

Powered by CMSimple | Template: ge-webdesign.de |