இங்கே உள்ளீர்கள்:   ஆரம்பம் > 13 வது ஆணை
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

13 வது ஆணை

பதினெண் சித்தர் பீடாதிபதியின் பதினெட்டு அருளாட்சி ஆணைகள்

13 வது ஆணை

 

இந்தப் பக்கத்தில் உள்ள தொடர்புகளைப் பயன்படுத்தி மீதி ஆணைகளைப் படிக்கவும்.
மெய்யான இந்துமதத்தில் பெண்களின் முக்கியத்துவம்

XIII. பொய்யான ஹிந்து மதத்தால்

பெண்கள் விதவையாக்கப் பட்டு ஒதுக்கி வைக்கப் படுவதும்;

மாதந்தோறும் மங்கையர்கள் பூப்படையும் போது அதனைத் தீட்டு என்று கூறி அவர்களை அனைத்து நிகழ்ச்சிகளிலிருந்தும் ஒதுக்கி வைப்பதும்;

ஆணுக்கு மட்டுமே மறுமணம் என்று கூறி பெண்ணின் வாழ்வைப் பாழாக்குவதும்;

பெண்ணை விதவை என்று கூறிப் பிறந்ததிலிருந்து அணிந்து மகிழும் பூ, மஞ்சள், குங்குமம், பொன்நகைகள் துறக்கச் செய்து துன்புறுத்துவதும்;

ஆண் மட்டுமே விருப்பத்திற்கேற்ப மறுமணம் செய்து கொள்ளலாம் என்று கூறிப் பெண்ணை அச்சுறுத்தி அடிமையாக்குவதும்;

‘ஐந்தீ வேட்டல்’, ‘முத்தீ ஓம்பல்’, ’48 வகையான கருவறை ஊழியக்காரர்களின் பணிகள்’ முதலியவற்றில் ஒன்றினைக் கூடப் பெண்கள் செய்யக் கூடாது என்று கூறிப் பெண்களை அருளுலகில் எந்தவொரு அருள் நிலையையும் பெறாத இருள்நிலையைப் பெறுமாறு செய்தும்;

பெண்ணைப் பேயென்றும் பிசாசென்றும் மோட்சத்திற்குத் தடையாயிருக்கும் பீடை என்றும்; உலக ஆசையை வளர்க்கும் மாயாசத்தி என்று இழித்தும் பழித்தும் கூறிப் பெண்ணுரிமையைத் தடுத்தும் கெடுத்தும் செயல்பட்டும்;

பெண்ணுக்குக் கல்வி உரிமையையும், சொத்துரிமையையும் மறுத்துப் பெண்ணை வெறும் போகப் பொருளாக்கியும்;

கணவனை இழந்த பெண்ணை மொட்டையடித்தும் நல்லுணவு* உண்ணாமல் செய்தும்; [*பல்சுவை உண்டி என்று பாட வேறுபாடு இருக்கிறது ஏடுகளில்] பயனற்றவர்களாக்கியும்;

பொதுவாகப் பெண்ணை வெளியிடங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் அழைத்துச் செல்லக் கூடாது என்று தடை விதித்து; பெண்ணை அரசியலிலோ, தத்துவ விசாரணையிலோ ஈடுபடக் கூடாது என்று தடுத்துக் கருத்துக் குருடர்களாக்கியும்;

.... முதலிய கொடிய மானுட நல விரோதச் செயல்களும், துரோகச் செயல்களும் புகுத்தப் பட்டுத் தமிழ்ச் சமுதாயம் பாழாக்கப் பட்டுவிட்டது. இவை அனைத்தையும் முறியடித்துச் சித்தர் நெறி எனும் மெய்யான இந்துமதத்தை மறுமலர்ச்சியும், வளவளர்ச்சியும், வலிமைச் செழிச்சியும், ஆட்சி மீட்சியும் பெறச் செய்ய வேண்டும்.

அதற்காகப் பெண்ணினத்தைப் பற்றி மெய்யான இந்துமதம் கூறுகின்ற கருத்துக்களில் ஒரு சிலவாவது செயலாக்க வேண்டும்.

  • ‘மாதந்தோறும் மலர்கின்ற மங்கையே மண்ணுலகப் பேரின்பம்’,
  • ‘இம்மண்ணுலகைப் பொன்னுலகாக்குகின்ற மகாசத்தியே பெண்’,
  • ‘மனித வாழ்வியலை இயக்குகின்ற அனாதிசத்தியே பெண்’,
  • ‘அனைத்துக்கும் ஆரம்பமாகவும் எல்லையாகவும் இருக்கின்ற ஆதிசத்தியே பெண்’,
  • ‘மனிதப் பண்பின் கண்ணே பெண்’,
  • ‘விண்வெளியிலுள்ள சத்திகளை வாங்கித் தாங்கி மானுடர்களுக்கு வழங்கும் சத்தி பீடமே பெண்’,
  • ‘கன்னிப் பூசைக்கும், பருவ பூசைக்கும் கருவறை நாயகமாக இருப்பவளே பெண்’,
  • ‘ஏந்தரீகத் தாந்தரீக மாந்தரீகப் பூசைகளின் கடவுளாக இருப்பவளே பெண்’,
  • ‘அனைத்து வகையான நலங்களை வழங்கும் காயகல்பமே பெண்’,
  • ‘தாயாக, தாரமாக, தானீன்ற மகளாக மாறுகின்ற முச்சூலியே பெண்’,
  • ‘சமய சமுதாய மரபுகள் அனைத்தையும் காத்திடும் காப்பகமே பெண்’,

...... இவை போன்ற எண்ணற்ற சித்தர் நெறிக் கருத்துக்களைப் பரப்பினால்தான் பெண்ணை இழிவுபடுத்துவதும், அடிமைப் படுத்துவதும், வலிமை யிழக்கச் செய்வதும், பெருமைகளைச் சிதைப்பதும், இன்ப வாழ்வைத் தடுத்துக் கெடுப்பதும், அறிவுக் கண்ணைக் குருடாக்குவதும் தடுக்கப் பட்டிடும்! தடுக்கப் பட்டிடும்! தடுக்கப்பட்டிடும்!

இதற்குப் பதினெண்சித்தர்களின் நான்மறைகள், நான்முறைகள், நானெறிகள், நான்வேதங்கள், பூசைமரபுகள், பூசைப்படிகள், பூசாவிதிகள், பூசாமொழிகள், 18 வகை வாக்குகள், வாக்கியங்கள், வாசகங்கள், பலவகையான அத்திறங்கள், சாத்திறங்கள், சூத்திறங்கள், நேத்திறங்கள்..... முதலியவைகளில் பொருளாழமிக்க அழகிய சொற்றொடர்கள் ஆயுதங்களாகப் பயன்பட்டிடும்.

சுருக்கமாகச் சொன்னால்,

‘மாதந்தோறும் மலரும் மலரான மங்கை பேரின்ப ஊற்றாக விளங்கிட வேண்டும்; அவள் எப்போதும் மஞ்சளும் பொட்டும் பூவுமாக மங்களமாக விளங்கிட வேண்டும். அவளே நடமாடுகின்ற கடவுளென உணர்ந்து போற்றிப் பேணிப் பாதுகாத்து வளர்த்திட வேண்டும். அவளே அனைத்துக்கும் தலைமைச் சத்தியாக, வழியாக, வழிகாட்டியாக, வழித்துணையாகப் பயன்படுத்தப் படல் வேண்டும். மாதொருபாகனை (அம்மையப்பனை) கருத்தில் கொண்டு ஆணும் பெண்ணும் சமமே என்றுணர்ந்து அனைத்திலும் அனைத்து உரிமைகளும் வழங்க வேண்டும் அவளுக்கு.

..... இந்தக் கருத்து வாசகங்களை எல்லாம் செயலாக்குவதுதான் மெய்யான இந்துமதத்தின் மறுமலர்ச்சிக்குரிய வழிகள்.

பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் ஞாலகுரு சித்தர் அமராவதியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் (கி.மு.100 முதல் கி.பி.150 முடிய) கலியுகத்தில் கலி பிறந்து இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்து இந்துமதத்தின் விளைநிலமான இந்தியாவிற்குள் வந்த பிறமண்ணினரான பிறாமணர் எனும் வட ஆரியரால் வளவளர்ச்சியும், வலிமைச் செழிச்சியும், ஆட்சிநிலையும் நலிவடையப்பட்ட மெய்யான இந்துமதத்தை மறுமலர்ச்சி அடையச் செய்வதற்காகத் தோற்றுவிக்கப் பட்ட இந்து மறுமலர்ச்சி இயக்கத்தின் சாதனங்களாகவும், போதனைகளாகவும் பயன்பட்டு வருவனவற்றின் சாரமே மேற்கூறிய பெண்ணின் பெருமை பற்றிய கருத்துக்கள்.

எனவே, அருட்பேரரசாக மலர்ந்திருக்கின்ற சோழப் பேரரசு மெய்யான இந்துமதத்தின் பெண்ணுரிமைகளையும் பெருமைகளையும் அரசியல் சட்டமாக அறிவித்துச் செயலாக்க வேண்டும். இதனைச் செய்யாமல் வட ஆரிய மாயையில் மயங்கித் தயக்கம் காட்டும் அருள்மொழித் தேவன் எனும் இராசராசனை எதிர்த்துப் போரிடவே வேண்டியிருக்கிறது. இதனைப் புரிந்தும் புரிய வைத்தும் செயல்பட்டிட்டால்தான் தமிழர்களை ஒற்றுமைப்படுத்தி பெருமைமிகு உரிமை வாழ்வு வாழச் செய்யும் மெய்யான இந்துமதம் மறுமலர்ச்சி பெற்றிடும். வளவளர்ச்சி அடைந்திடும், வலிமைச் செழிச்சி உற்றிடும், ஆட்சி மீட்சி பெற்றிடும்.


« முந்தையது மேலே செல்ல அடுத்தது »

மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

sathilingam © Copyright www.indhuism.org 2010-2020; Data in this website are from the Manuscript Libraries initiated by His Holiness Siddhar Arasayogi Karuwooraar, the 12th Pathinensiddhar Peedam.
Also visit http://www.indhuism.org; Contact us at indhuism@gmail.com


தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். அவருக்கு அடுத்து 900 ஆண்டுகள் கழித்து 12வது பதினெண்சித்தர் பீடாதிபதியாகத் திருத்தோற்றம் எடுத்த ஞானாச்சாரியார் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் எழுத்துக்களில் சில இந்த வலைத்தளத்தில் வெளியிடப் படுகின்றன. இவை ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் குருவாணைப்படியே அவர்கள் அமைத்திட்ட கையெழுத்துப் பிறதி நூலகங்களில் உள்ள நகல்களிலிருந்து வழங்கப் படுகின்றன.


தமிழே பூசைமொழி! தேவமொழி! தெய்வமொழி! அருளுலக ஆட்சிமொழி!


"இந்துக்கள் தங்களுடைய கோயில்களில், பூசைகளில் சமசுக்கிருதத்தைப் பயன்படுத்துவது பெரிய பாவம், கொடிய தீட்டு, நெடிய சாபத்தைத் தரும்." - குருபாரம்பரிய வாசகம்.

Powered by CMSimple | Template: ge-webdesign.de |