Writings of His Holiness Siddhar Arasayogi Karuwooraar

URL: gurudevartamil.indhuism.org/DivineRule/?%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88

முடிவுரை

பதினெண் சித்தர் பீடாதிபதியின் பதினெட்டு அருளாட்சி ஆணைகள்

முடிவுரை

இந்தப் ‘பதினெண் சித்தர் பீடாதிபதியின் பதினெட்டு அருளாட்சி ஆணைகள்’ என்ற கட்டுரை சேலம் மாவட்டம் மோகனூர் உருத்திரம் பிள்ளையால் உரைநடையில் எழுதப்பட்டு (அதுவரை இந்தப் பதினெண் சித்தர் பீடாதிபதியின் அருளாட்சி ஆணைகள் கவிதை நடையில் இருந்திட்டன), கண்டப்பக் கோட்டைச் சித்தர் ஏளனம் பட்டியார் உ. இராமசாமிப் பிள்ளையால் மீண்டும் படியெடுக்கப் பட்டது. பிறகு, இந்த ஆணைகள் கரூர் முடிகணம் காக்காவழியன் பண்ணையாடி சித்தர் காக்கையர் எனப்படும் காகபுசுண்டர் ம.பழனிச்சாமி பிள்ளை அவர்களால் எழுதப்பட்ட “தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறாரின் வரலாற்றின்” பன்னிரண்டு தொகுதிகளில் பன்னிரண்டாவது தொகுதியின் இறுதிப் பகுதியாக அமைக்கப் பட்டிருக்கிறது.

எனவே, அருட்பேரரசாக உருவாக்கப் பட்ட பிற்காலச் சோழப் பேரரசு பற்றிய [கி.பி.785 முதல் கி.பி.1279 முடிய] பேருண்மைகளைத் தெரிந்து கொள்ளவாவது தமிழர்களில் யாராவது சிலர் அல்லது ஒருவர் பேரார்வத்துடன் முன்வந்தாவது இந்தப் பன்னிரண்டு வரலாற்றுத் தொகுதிகளையும் வெளிக் கொணரும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் கட்டுரை வெளியிடப் படுகிறது.

இதிலுள்ள எந்த ஒரு சொல்லோ, கருத்தோ பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதியாலோ அல்லது வேறு யாராலோ கூறப்படவில்லை! கூறப்படவில்லை! கூறப்படவில்லை! கூறப்படவே யில்லை! அதாவது, இந்தக் கட்டுரையிலுள்ள எந்த ஒரு சொல்லும் குருவழி வாரிசுகளாலோ அல்லது கருவழி வாரிசுகளாலோ எழுதப் படவில்லை! எழுதப் படவில்லை! எழுதப் படவில்லை! எழுதப் படவேயில்லை! ஏனெனில், இக்கட்டுரையிலுள்ள பெரும்பாலான சொற்களும் சொற்¦றாடர்களும் கருத்துக்களும் இந்த இருபதாம் நூற்றாண்டின் பிரதி பலிப்புக்கள் போலவே இருக்கின்றன.

எனவே, ‘பலமுறை உலகச் சுற்றுப் பயணங்களைச் செய்த ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களுடைய தொலைநோக்கும், அநுபவம் மிக்க போக்கும்தான் இந்த அருளாட்சி ஆணைகளின் வாக்கியங்களாகவும், வாசகங்களாகவும் வடிவெடுத்திருக்கின்றன’ என்பதனை இன்றுள்ள தமிழர்களாவது புரிந்து கொள்ள வேண்டும்! புரிந்து கொள்ள வேண்டும்! புரிந்து கொள்ள வேண்டும்! அப்பொழுதுதான் தமிழ்மொழிக்கும், இனத்துக்கும், பண்பாட்டுக்கும், நாகரிகத்திற்கும் கலைக் களஞ்சியங்களாக விளங்குகின்ற பீடாதிபதிகளின் படைப்புக்களனைத்தும் முழுமையாக அச்சேறி வெளிவரக் கூடிய பொன்னான வாய்ப்பு உருவாகிடும்!

இன்னும் சொல்லப் போனால், சித்தர்களின் நெறிகள், முறைகள், கலைக் கருவூலங்கள், அறிவியல் சாதனைகள், அருளுலகப் போதனைகள்.... முதலியவைகள் அனைத்தும் வெளி வந்தால்தான் இம்மண்ணுலகின் வரலாறு முழுமை பெறும்! முழுமை பெறும்! முழுமை பெறும்! இப்பணியில் ஆர்வம் உள்ளவர்கள் ஆரவாரமின்றி அமைதியாகப் பணியாற்றத் தொடர்பு கொள்க!

- நிறுவன நிர்வாகக் குழு
 இந்து மறுமலர்ச்சி இயக்கம்